ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ரூ.9.78 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்: அதிகாரிகள் தகவல்

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.89.78 லட்சம் செலுத்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை சில மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படும். இந்நிலையில், இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலை நடைபெற்றது.

இதற்கு, மாசாணியம்மன் கோயில் தக்கார் தலைமை தாங்கினார். பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சத்தியவதி, ஆணையர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் உள்ள மொத்தம் 22 நிரந்தர உண்டியல் மற்றும் தட்டுக்காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.58 லட்சத்து 39 ஆயிரத்து 353ம், தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.31 லட்சத்து 29 ஆயிரத்து 224ம் என மொத்தம் ரூ.89 லட்சத்து 78 ஆயிரத்து 577 இருந்தது. மேலும், நிரந்தர உண்டியலில் தங்கம் 170 கிராம், வெள்ளி 306 கிராம் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: