பழங்குடியினர் கிராமத்தில் ‘கம்பட்ராயர்’ திருவிழா கோலாகலம்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கோத்தர் பழங்குடியின மக்கள் வசிக்கும் கொல்லிமலை கிராமத்தில், கம்பட்ராயர் கோயில் திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது.   நீலகிரி மாவட்டத்தில் தோடர்,கோத்தர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இதில், கோத்தர் பழங்குடியின மக்கள் ஊட்டி அருகேயுள்ள கோக்கால், கொல்லிமலை, குந்தா, கோத்தகிரி,திருச்சிக்கடி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் தங்களது கலாச்சாரம் மாறாமல் வாழ்ந்து வருகின்றனர்.   மேலும், இந்த இன மக்கள் பண்டிகை, திருமணங்கள், இறப்பு சடங்குகள் போன்றவற்றை பாரம்பரியம் மாறாமல்  கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள கொல்லிமலை கிராமத்தில் கம்பட்ராயர் திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது. விழாவில், பழங்குடியின மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை கடவுளுக்கு படைத்தனர். தொடர்ந்து, அனைவரும் அங்குள்ள பெரிய புல் மைதானத்தில் தங்களது பாரம்பரிய நடனமாடினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: