பலாத்கார வழக்கில் சிக்கிய பிஷப்புக்கு எதிராக போராட்டம் 4 கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராட்டம் நடத்திய 4 கன்னியாஸ்திரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஜலந்தர் பிஷப் பிராங்கோ தன்னை பலாத்காரம் செய்ததாக கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பிஷப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து, பிஷப் பிராங்கோவை கைது செய்யக் கூறி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியுடன் பணிபுரிந்து வந்த அனுபமா, ஜோசபின், ஆல்பியா, ஆன்சிட்டின் ஆகிய 4 கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதன் பிறகுதான் பிஷப் பிராங்கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த 4 கன்னியாஸ்திரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனுபமா அமிர்தசரசுக்கும், ஜோசபின் ஜார்கண்டில் உள்ள செயின்ட் தாமஸ் கான்வென்டுக்கும், ஆல்பியா பீகாரில் உள்ள செயின்ட் ேஜாசப் கான்வென்டுக்கும், ஆன்சிட்டின் கண்ணூர் பரியாரத்தில் உள்ள கான்வென்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: