இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட தமிழர்

மும்பை: இந்தி தெரியாத ஒரே காரணத்துக்காக தமிழர் ஒருவர் மும்பை விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டார். இதை அவரே டிவிட்டரில் வெளியிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆபிரகாம் சாமுவேல். சம்பவத்தன்று இவர் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாடு சென்றார். விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரி ஒருவர் தன்னை இழிவு படுத்தியதாக சாமுவேல் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஆங்கிலமும் தமிழும் மட்டுமே தெரியும் என்றும் இந்தி தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தி தெரியாத காரணத்தால் இமிகிரேஷன் அதிகாரி தன்னை இழிவுப்படுத்தியதாக சாமுவேல் கூறியுள்ளார்.

அந்த அதிகாரி பொது அறிவு இல்லாதவர் என்றும் முட்டாள் என்றும் டிவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி மத்திய அரசில் வேலைக்கு சேர்ந்தார் என்றே தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  சம்பவம் நள்ளிரவு நடந்துள்ளது. விமான நிலையத்தின் 33வது இமிகிரேஷன் கவுண்டரில் பணிபுரிந்த அதிகாரிதான் தன்னை இழிவுப்படுத்தியதாகவும் சாமுவேல் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு அவமான பிறவி ஆவார். விமானம் இரவு 1 மணிக்கு கிளம்பவிருந்தது. அதனால்தான் தான் அவசர அவசரமாக விமானத்துக்கு சென்று பயணத்தை மேற்கொண்டதாகவும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்திருப்பேன் என்றும் சாமுவேல் தெரிவித்திருந்தார்.சாமுவேலின் டிவிட்டர் பதிவை பார்த்த இமிகிரேஷன் துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரி கவுண்டரில் இருந்து நீக்கப்பட்டு, அவர் மீது விசாரணை நடத்தப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். பயணிகளிடம் எப்படி மென்மையாக பழக வேண்டும் என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று இன்னொரு அதிகாரி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: