76-வது கோல்டன் குளோப் விருது விழா: அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது

கலிபோர்னியா: 76-வது கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவில் நடைபெற்றது. ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விருது விழாவை ஆன்டி சாம்பெர்க் (Andy Samberg) மற்றும் சான்ட்ரா ஹோ (Sandra Oh) ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கோல்டன் குளோப் விருது விழாவில் பொஹிமியன் ராப்சோடி (Bohemian Rhapsody) எனும் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்றது. கிரீன் புக் (Green Book) என்ற திரைபடத்திற்கு அதிகபட்சமாக 3 விருதுகள் கிடைத்தது. சிறந்த மியூசிக்கல் அல்லது நகைச்சுவை படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் கிரீன் புக் திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது.  

வைஸ் (Vice) படத்தில் நடித்ததற்காக ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேலுக்கு (Christian Bale) சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது தி வைஃப் (The Wife) படத்தில் நடித்த கிளென் க்ளோஸ் (Glenn Close) எனும் நடிகைக்கு கிடைத்தது. சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக மெக்ஸிகோ நாட்டின் ரோமா (Roma) திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருது ரோமாவை இயக்கிய அல்போன்ஸோ குவாரனுக்கு (Alfonso Cuarón) கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: