ராஜஸ்தான் முதல்வராக இருந்தபோது ‘சரக்கு’ அடிப்பதில்தான் வசுந்தரா பிசியாக இருந்தார்: வைரலாக பரவுகிறது காங். எம்எல்ஏ பேச்சு

ஜெய்ப்பூர்: ‘‘ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே இருந்தபோது, எந்த வேலையும் செய்யாமல் மது பாட்டில்களை திறப்பதில்தான் அவர் பிசியாக’ இருந்தார்’’ என பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பகிரங்கமாக குற்றச்சாட்டு சுமத்திய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரதாப்கர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ ராம்லால் மீனா. இவர் முதல் முறை எம்.எல்.ஏ. தனது மாவட்டத்தில் விரவாலி என்ற இடத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நடத்தினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராம்லால் மீனா, ‘‘முதல்வர் அசோக் கெலாட்டின் முயற்சிகளை பாராட்ட வேண்டும்.  முதல்வராக பதவியேற்ற நிமிடத்தில் இருந்து அவர் பணியாற்றி வருகிறார். பாஜ.வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக இருந்தபோது எந்த வேலையும் செய்யவில்லை. மது பாட்டில்களை திறப்பதில்தான் அவர் பிசியாக இருந்தார். இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன’’ என்றார். எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு, வீடியோ வடிவில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: