சபரிமலையில் 18ம் படி ஏற கட்டுப்பாடுகள் தளர்வு: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம்: சபரிமலையில் இரவு நடை சாத்தப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 30ம் தேதி மாலை ேகாயில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இளம்பெண்கள் அனுமதி தொடர்பான போராட்டம் மற்றும் 144 தடை உத்தரவு ஆகியவற்றின் காரணமாக மண்டலக் காலம் முதல் இரவு நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் 18ம் படி ஏற தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் முதல் இரவு நடை சாத்தப்பட்ட பின்னரும் 18ம் படி ஏற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: