ஆங்கிலப் புத்தாண்டு பூத்திருக்கிறது. பல்வேறு இடங்களிலும் பலவித தொடக்க ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இதோ ஆண்டுகள் குறித்த தகவல்கள்...
* இடைக்காலப் பாண்டியர், பிற்காலச் சோழர், பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் ஆட்சி ஏறிய ஆண்டினை ‘யாண்டு’ என குறிப்பிடுகின்றனர். ஒரு மன்னன் ஒரு வருடத்தில் எந்த பட்சத்தில் எந்த நட்சத்திரத்தில் முடிசூட்டினானோ அடுத்த ஆண்டு அதே மாதம், அதேபட்சம், அதே நட்சத்திரத்தில் இரண்டாம் யாண்டு தொடக்கமாகும். கிபி 14ம் நூற்றாண்டு வரை இம்முறை வழக்கில் இருந்திருக்கிறது.
இவை தவிர கங்க ஆண்டு (கிபி 496), கலச்சூரி ஆண்டு (கிபி 606-607), லட்சுமணசேனா ஆண்டு (கிபி 1179) இப்படி பல்வேறு ஆண்டுகள் இருந்திருக்கின்றன. கிபி 2019ஐ தொட்டிருக்கிற நம்மவர்களுக்கு நமது பயன்பாட்டில் இத்தனை ஆண்டுகள் இருந்தன என்பதே வியப்புத் தகவல்தான்! திருவள்ளுவராண்டு! தமிழகத்தில் பல்வேறு பெயர்களிலான ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறள் வழங்கிய திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றவும், இதையே தமிழ் ஆண்டாகக் கொள்ளவும் தொடர் கோரிக்கைகள் எழுந்தன. மேலும், திருவள்ளுவரின் காலம் கிமு 31 எனவும் கணிக்கப்பட்டது. இதன்பேரில், ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்ட வருவது திருவள்ளுவர் ஆண்டு என முடிவானது. உதாரணமாக, தற்போதைய ஆங்கில ஆண்டான 2019 + 31 = 2050 என கணக்கிடப்பட்டது. திருவள்ளுவர் ஆண்டின் பனிரெண்டு மாதங்கள் சுறவம் (தை), கும்பம் (மாசி), மீனம் (பங்குனி), மேழம் (சித்திரை), விடை (வைகாசி), ஆடவை (ஆனி), கடகம் (ஆடி), மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி), துவை (ஐப்பசி), நளி (கார்த்திகை), சிலை (மார்கழி) எனவும் உருவாக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் ஆண்டு முறையை தமிழக அரசு ஏற்று 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி