சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் மன்டோலி சிறையில் அடைப்பு

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சஜ்ஜன் குமார் டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சஜ்ஜன் குமாரை டிசம்பர் 31-ம் தேதிக்குள் சரணடையுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் அவர் சரணடைந்தார். திகார் சிறையில் அடைக்க சஜ்ஜன் குமார் தரப்பு கேட்டுக் கொண்டதை நிராகரித்த நீதிபதி அவரை மன்டோலி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து போலீஸ் வாகனத்தில் அவர் சிறைசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என்பதை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: