தேர்தல் ஆணையம் அறிவிப்பு...‘இந்தாங்க பிடிங்க கண்ணாடி டம்ளர்’: பவன் கல்யாண் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு

புதுடெல்லி: நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு கண்ணாடி டம்ளர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதனை, பவன் கல்யாண் வரவேற்றுள்ளார். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், கடந்த 2014ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் பாஜ மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இவரது கட்சி தேர்தலில் போட்டியிடும் என்று பவன் கல்யாண் தெரிவித்திருந்தார். ‘‘2019ல் நடைபெறும் நாடாளுமன்ற, ஆந்திர சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தனித்து போட்டியிடுவேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண், புதிய கட்சி தொடங்கிய நிலையில் அவரது கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளால், தனது கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அதையடுத்து, அவரது கட்சிக்கு, ‘கண்ணாடி குவளை(டம்ளர்)’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில், ‘கண்ணாடி டம்ளர்’ சின்னத்தை ஜன சேனா கட்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செய்தியை பவன் கல்யாண் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதேபோல், நாடுமுழுவதும் 29 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம்  தேர்தல் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ள அவர், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா திரும்புகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: