பெய்ட்டி புயல் தாண்டவத்தால் காக்கிநாடா ஓஎன்ஜிசி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சரிந்தது

திருமலை: ஆந்திராவில் பெய்ட்டி புயல் குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் பலமுறை எச்சரிக்கை செய்து வந்தது. பெய்ட்டி புயலால்  பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது. புயல் காரணமாக கடந்த 16ம் தேதி கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடா அமலாபுரம் துறைமுகத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்  பணிபுரியும் 120 ஊழியர்களும் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் புயலால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒருபுறமாக சரிந்துள்ளது. இதனால் அங்கு கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த பழுதை சரிசெய்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள  இந்திய விமானப்படை உதவியுடன் ஓஎன்ஜிசி நிபுணர்கள் 13 பேர் கொண்ட குழுவினர் ஹெலிக்காப்டரில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அங்கு அவர்கள் தீவிரமாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் எண்ணெய் சுத்திகரிப்பு பணி் தொடங்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: