விடுதி அறையில் தங்கியிருந்த மருத்துவ கல்லூரி மாணவி கழுத்தை நெரித்து படுகொலை

அவுரங்காபாத்: அவுரங்காபாத்தில், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் மர்ம ஆசாமியால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் தேஷ்முக். இவரது மகள் அகான்ஷா (21). இவர் அவுரங்காபாத்தில் உள்ள மகாத்மா காந்தி மிஷன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் உள்ள ஒரு அறையில் இவர் தனியாக தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அகான்ஷாவின் அறைக்கதவு திறந்து கிடந்தது. விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தபோது, உள்ளே அகான்ஷா மூர்ச்சையின்றி கீழே கிடந்தார். இதுபற்றி ஊழியர்கள் வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அகான்ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அகான்ஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில், அகான்ஷா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் ராகுல் காடே தெரிவித்தார். விடுதி அறையில் அகான்ஷா தனியாக இருந்தபோது மர்ம ஆசாமி உள்ளே நுழைந்து அகான்ஷாவை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத ஆசாமிக்கு எதிராக இ.பி.கோ. 302வது பிரிவில் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: