கஜாவால் பரிதாபம் கோடியக்கரை சரணாலயத்தில் 373 பறவைகள், 18 மான்கள் பலி

வேதாரண்யம்: நாகை வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம் உள்ளது. கடந்த 15ம் தேதி  வீசிய கஜா புயலால் காட்டிலுள்ள பெரும்பாலான மரங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் புயல்  பாதிப்புக்குபின் விலங்குகள், பறவைகள்  கணக்கெடுக்கும் பணியில், நாகை வன உயிரின காப்பாளர் நாகசதிஷ்கிடிசாலா தலைமையில்  வனத்துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.  கணக்கெடுப்பில் 17 வெளிமான்களும், ஒரு புள்ளிமானும், 4 பன்றிகளும், 373  பறவைகளும் இறந்துள்ளதாக கோடியக்கரை வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: