கஜா புயல் பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வு தேதி வெளியீடு: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 23 இன்ஜினியரிங் கல்லூரிகளில் நவம்பர் 22,23,24ம் தேதிகளில் நடைபெறவிருந்த  செமஸ்டர் தேர்வுகளுக்கான  தேதிகளை வெளியிட்டு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இரண்டாவது பருவ செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். கஜா புயல் பாதிப்பால்  நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்று வீசியதில் செல்போன் டவர்கள்  சாய்ந்தது. மின்கம்பிகள், சாலைகளில் மரங்கள் விழுந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதோடு, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நாகப்பட்டினம்,  திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 23 கல்லூரிகளில் நவம்பர் 22,23,24ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

(குறிப்பிட்ட 23 கல்லூரிகளின்  தேர்வு கோடு எண்: 8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 828, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124, 9126). தற்போது அந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 22ம் தேதி நடைபெற வேண்டிய தேர்வுகள் டிசம்பர் 18ம் தேதியும், நவம்பர் 23ம் தேதி  நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 19ம் தேதியும், நவம்பர் 24ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 20ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: