பிரதமர் மோடி - கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு : மேகதாது அணை, கஜா புயல், 7 பேர் விடுதலை குறித்து பேசியதாக தகவல்

டெல்லி: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை நேற்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.  மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி  அளித்ததை கண்டித்து தமிழக சட்டப்பேரவை தனி தீர்மானம் நிறைவேற்றி, அதன் நகலையும் பிரதமருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. மேலும், கஜா புயல் பாதிப்பு போன்ற பல்வேறு அசாதாரன சூழல்,7 பேர் விடுதலை ெதாடர்பான போராட்டம் நிலவும் இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு பின்னர் மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் அவசரமாக டெல்லி சென்றார்.

விமான நிலையத்தில் இருந்து நேராக பிரதமர் நரேந்திர மோடி இல்லத்திற்கு மாலை 5.30 மணிக்கு சென்று சுமார் அரை மணி நேரம் அவருடன் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மோடியிடம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் எடுத்துரைத்ததாக தெரிகிறது.  கவர்னர் மாதாந்திர அறிக்கையை கொடுக்க ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திக்க வந்தாலும் இம்முறை நேராக பிரதமர் வீட்டிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கவர்னர் நேற்று இரவே விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: