ஹார்லிக்சை வாங்கியது ஹிந்துஸ்தான் யூனிலீவர்

புதுடெல்லி: ஹார்லிக்ஸ் நிறுவனத்தை யூனிலீவர் வாங்கியுள்ளது.  ஊட்டச்சத்து பான விற்பனையில் இந்திய சந்தையில் 72.5 சதவீதத்தை பிடித்துள்ளது ஹார்லிக்ஸ். நாவர்ட்டீஸ் மருந்து இதை கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனம் ஹார்லிக் நிறுவனத்தை விற்க முடிவு செய்தது. ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் பிஸ்கெட் மற்றும் மதர் ஹார்லிக்ஸ் ஆகியவை அடங்கும்.  இந்த நிறுவனத்தை இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிலைப்படுத்தும் நோக்கில் யூனிலீவர் நிறுவனமும் ஆர்வம் காட்டுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான தகவல்கள் ெநஸ்ட்லேதான் வாங்குகிறது என தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஹார்லிக்சை வாங்கியதாக யூனிலீவர் நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. 31,700 கோடிக்கு ஹார்லிக்ஸ் கைமாறுகிறது. மிக பிரபலமான ஊட்டச்சத்து பானமான ஹார்லிக்ஸ், இங்கிலாந்தை சேர்ந்த கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனத்தின் தயாரிப்பு. 1843ம் ஆண்டில் வில்லியம் மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பானம் உலகம் முழுக்க பிரபலம். 2ம் உலகப்போரின்போது மிட்டாய் மற்றும் மாத்திரைகளாக இது போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு இந்தியாவில் இந்த பானம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: