மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது தமிழக அரசு

டெல்லி : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேகதாது அணை வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மேகதாது அணை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும்  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: