ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அர்ஜென்டினா பயணம் : சீன, அமெரிக்க அதிபர்களையும் சந்திக்க உள்ளார்

புய்னோஸ் எய்ரேஸ் : ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அர்ஜென்டினாவிற்கு புறப்பட்டு செல்கிறார். இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜி20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாடு அர்ஜென்டினாவில் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. வேளாண்த்துறை சீர்திருத்தம், வர்த்தகம் சூழலியல் மாற்றம், சுகாதாரம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன.

இதைத் தொடர்ந்து பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் அமைப்பு தலைவர்களின் மாநாடும் நடைபெற உள்ளது. ஜீ20 மாநாட்டின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ள பிரதமர் மோடி, அவருடன் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், தொழில்நுட்ப பரிவர்த்தனை, பாதுகாப்பு உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி தொடர்ந்து 4வது முறையாக சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது அருணாச்சலப் பிரதேசத்தின் சீன படைகளின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி பிரச்சனை எழுப்ப வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ புடரஸ், ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மேர்க்கெல், பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரான்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: