சீரடி சாய்பாபா கோவில் இந்து மதத்தைப் போன்று மாற்றப்படுவதாக முஸ்லிம்கள் குற்றச்சாட்டு

சீரடி: சீரடி சாய்பாபா கோவில் காவிமயமாக்கப்படுவதாக முஸ்லிம்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மகாராஷ்ரா மாநிலத்தில் சாய்பாபா சமாதியடைந்த இடமான சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. சீரடி சாய்பாபா கோவிலுக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில்

சீரடி சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையில் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றதில் இருந்து வழிபாட்டு நடைமுறைகள் இந்து மதத்தைப் போன்று மாற்றப்பட்டுள்ளதாகவும், கொடிமரத்தில் ஓம் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூரில் உள்ள முஸ்லிம்கள் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலரிடம் ஒரு புகார் அளித்துள்ளனர். அதில் கோவிலின் வண்ணம், பெயர்ப்பலகைகளின் வண்ணம் உள்ளிட்ட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: