தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : இதுவரை 87 பேரிடம் விசாரணை நடத்தியதாக அருணா ஜெகதீசன் தகவல்

தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இதுவரை 87 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தூத்துக்குடியில் விசாரணை ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ம்  தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது கலவரம் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலி ஆனார்கள். இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை கடந்த மே 23ம் தேதி அரசு நியமித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: