மாணவி சோபியாவுடன் வாக்குவாதம் தமிழிசை மீது வழக்குப்பதிய கோரிய மனு தள்ளுபடி

தூத்துக்குடி:  தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்தவர் சாமி. ஓய்வுபெற்ற அரசு டாக்டர்.  இவரது மகள் சோபியா. கனடாவில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் வந்தார். அதே விமானத்தில் பாஜ மாநில தலைவர் தமிழிசையும் வந்துள்ளார். விமானத்திலிருந்து இறங்கும்போது மாணவி சோபியா, பாசிச பாஜ அரசு ஒழிக என கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து தமிழிசை தெரிவித்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். நடந்த சம்பவம் தொடர்பாக சோபியாவின் தந்தை சாமி புதுக்கோட்டை போலீசில் அளித்துள்ள புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அவர் தூத்துக்குடி 3வது ஜேஎம் கோர்ட்டில் தமிழிசை உள்ளிட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார். புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தியதாகவும், தமிழிசை உள்ளிட்ட பாஜவினர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இதனடிப்படையில் தூத்துக்குடி கோர்ட் சோபியாவின் தந்தை சாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: