சாட்சிகள் பாதுகாப்பு மசோதா பற்றி மாநிலங்களுக்கு உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘சாட்சிகள் பாதுகாப்பு மசோதவை அமல்படுத்தும் நடவடிக்கையை தொடங்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடுவோம்’’ என உச்சநீதிமன்றம் நேற்று கூறியது.  சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி  சட்டத்தில் உள்ளதுபோல் சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி, மத்திய அரசு வரைவு திட்டம் உருவாக்கி, மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டது. அந்த வரைவு மசோதா தயார் நிலையில் உள்ளது.

 இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ‘‘சாட்சிகள் பாதுகாக்கும் வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது இனிமேல் சட்டமாக்கப்படும். அதுவரை சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை தொடங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்–்றம் உத்தரவிட வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘‘இந்த உத்தரவை நாங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிப்போம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: