மதுரை: நெல்லை, பாளையங்கோட்டையை சேர்ந்த சிவஜெயப்ரகாஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அரசியல் செல்வாக்ைக பயன்படுத்தி அவரது ஜாதியை மறைத்து, தேவேந்திரகுல வேளாளர் என ஜாதிச் சான்று வாங்கியுள்ளார். இதன்மூலம் சமூக மக்களையும் ஏமாற்றியுள்ளார். எனவே, கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்,’’ என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
