2026ஆம் ஆண்டின் தேர்தல் தீர்ப்பு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒவ்வொரு குடும்பத்துக்கு திராவிட மாடல் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன. திராவிட மாடல் அரசின் திட்டத்தால் குடும்பத்தில் ஒருவராவது பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தீவிர நிதி ஆலோசனைக்கு பிறகே ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் உட்பட திமுகவின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது அறிவித்த அனைத்து நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டனி மகத்தான வெற்றி பெறும் என முதல்வர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு பொதுமக்களின் அமோக ஆதரவு உள்ளது . அரசின் மீது அதிருப்தி இல்லை. கண்கூடாக தெரியும் திமுக அரசின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களே அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கின்றன. மக்கள் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

மாநிலம் முழுவதும், வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதியாக மட்டுமல்லாமல், கள அளவிலேயே கண்கூடாகத் தென்படுகிறது.
2026ஆம் ஆண்டின் தேர்தல் தீர்ப்பு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். திமுக ஒரு தீர்க்கமான மக்கள் ஆணையைப்பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: