தெலங்கானா தேர்தலில் ‘பிங்க் கலர்’ பிரச்னை

ஐதராபாத்: பிங்க் கலர் (இளஞ்சிவப்பு) பொதுவாக பெண்களுக்கு பிடித்த நிறம். ஆனால், இந்த பிங்க் நிறம் தெலங்கானா தேர்தலில் பெரும் சர்ச்சையின் மையப் பொருளாக அமைந்துவிட்டது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, தனது திட்டங்களை எல்லாம் அமல்படுத்தும்போது பிங்க் கலரிலேயே விளம்பரம் செய்து பிரபலப்படுத்தும். மேலும், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர் ராவ் உள்பட அக்கட்சியின் தலைவர் கழுத்தில் அணியும் துண்டின் நிறமும் பிங்க் கலரே. இவ்வாறு இருக்கும்போது, தேர்தல் கமிஷன் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ஒட்டப்படும் வேட்பாளர்கள் பெயர் அடங்கிய வாக்குச்சீட்டை பிங்க் கலரில் அச்சடித்து ஓட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 90 லட்சம் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி அதிகம் பயன்படுத்தும் பிங்க் கலரில் வாக்குச்சீட்டு அச்சடித்து வாக்குப் பதிவு இயந்திரன் மீது ஓட்டினால், அது வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பிங்க் கலரை பயன்படுத்த காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆட்சேபனையை தேர்தல் ஆணையம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வாக்குப்பதிவு இயந்திரம் மீது ஓட்டப்படும் வாக்குச்சீட்டின் நிறம்தான் பிங்க் கலர். வாக்காளர் பூத் சிலிப்கள் வெள்ளை நிறத்தில்தான் அச்சிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படிதான் நடக்கிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: