பாஜ எம்பி, எம்எல்ஏ காங்கிரசில் ஐக்கியம்

புதுடெல்லி: ராஜஸ்தான் பாஜ எம்பி ஹரிஷ் சந்திரா மீனா, எம்எல்ஏ ரஹ்மான் காங்கிரசில் இணைந்துள்ளனர். ராஜஸ்தானில் பாஜ ஆட்சி நடந்து  வருகிறது. முதல்வராக வசுந்தரா ராஜே இருந்து வருகிறார். ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்,   பாஜ.வை சேர்ந்த தவுசா எம்பி ஹரிஷ் சந்திரா மீனா கட்சியில் இருந்து விலகி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் ெகலாட் முன்னிலையில்  காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார். இதேபோல் நகார் தொகுதி எம்எல்ஏ ரஹ்மானும், காங்கிரசில் இணைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: