தஞ்சை அருகே விவசாயிகள் போராட்டம்... மேட்டூர் நீர் கடைமடை சேரவில்லை என புகார்

தஞ்சை: மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறந்து 5 மாதங்கள் ஆகியும் கடைமடைக்கு தண்ணீர் வராததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம், மல்லிபட்டினம், உள்ளிட்ட கடைமடை பகுதிகள் இன்னும் காய்ந்தே கிடக்கின்றன. மேட்டூர் அணையில் நீர் இந்த இடங்களுக்கு வந்து சேரும் படி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் அதிராமபட்டினம் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் அதிராமபட்டினம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை கர்நாடகத்தில் இருந்து இந்த முறை நீர் அதிக அளவில் வந்ததால் மேட்டூர் அணை 3 முறை முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் அணை நிரம்பியும் கடைமடை விவசாயிகள் பயன்பெறவில்லை என்று கூறியே அதிராமபட்டினத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: