தேர்தலை யூகம் வைத்து சில திட்டங்களை நிறைவேற்ற ரிசர்வ் வங்கியிடம் ஒத்துழைப்பை நாடி வருகிறது பாஜக அரசு

டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் பிரதமர் மோடியை கடந்த 8-ம் தேதி அன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிறுகுறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி விரைவில் ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பாஜக அரசு தேர்தலை யூகம் வைத்து சில திட்டங்களை நிறைவேற்ற ரிசர்வ் வங்கியிடம் ஒத்துழைப்பை நாடி வருகிறது.

ரிசர்வ் வங்கியில் செய்யப்பட்ட ஒரு மூலதனத்தில் ஒரு பகுதியை மத்திய அரசு திருப்பி கேட்டதாகவும் தகவல் வெளியாகின. மேலும் இந்த உபரி மூலதனத்தை அரசின் திட்டங்களை செயல்படுத்த ரிசர்வ் வங்கி செயல்படுத்தும் என்றும் இந்த சந்திப்பு அதன் அடிப்படையிலேயே நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: