பல்கலைக்கழகத்தில் கேரளா அமைச்சர் மனைவிக்கு முறைகேடாக உயர் பதவி: எதிர்க்கட்சிகள் புகாரால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள அமைச்சரின் மனைவிக்கு பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பதவி வழங்கியதாக புகார் கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் சுதாகரன். இவரது மனைவி ஜூபிலி நவபிரபா. ஆலப்புழாவில் உள்ள ஒரு கல்லூரியில் துணை முதல்வராக பணிபுரிந்து சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், கடந்த சில மாதத்துக்கு முன்பு இவருக்கு கேரள பல்கலைக்கழகத்தில் மேலாண்மை தொழில்நுட்ப துறை மற்றும் ஆசிரியர் கல்வி இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. இந்த பதவி ஜூபிலி நவபிரபாவுக்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக கேரள பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சசிகுமார், கவர்னர் சதாசிவத்திடம் புகார் அளித்தார்.  இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜூபிலி நவபிரபா திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் துணை முதல்வர் பதவியில் இருந்தபோது 1.60 லட்சம் சம்பளம் வாங்கினேன். நான் ஓய்வுபெற்ற உடன் பல்வேறு நாடுகளில் இருந்து உயர் பதவிக்கான அழைப்புகள் வந்தன. ஆனால் நமது சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்பதற்காக 35 ஆயிரம் மட்டுமே சம்பளம் உள்ள பல்கலைக்கழக பதவியில் சேர்ந்தேன். ஆனால் எனக்கு அளிக்கப்பட்ட இந்த பதவியை காரணம் காட்டி எனது கணவர் பதவியை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். எனக்கு வேலையை விட எனது கணவர் தான் முக்கியம். எனக்கு வழங்கப்பட்ட வேலையை குப்பைத்தொட்டியில் வீசுகிறேன். எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: