ஜவ்வாது மலை கிராமத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்க அதிகாரி லஞ்சம் பெறும் வீடியோ வைரல்

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் பிறப்புச் சான்றிதழ் வழங்க ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அதிகாரி ஒருவர் ரூ.200 லஞ்சம் பெரும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மலை கிராமத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இந்த லஞ்ச காட்சி அரங்கேறியுள்ளது. அங்கு பணியாற்றும் அதிகாரி பிறப்புச் சான்றிதழ் தருவதற்காக பேரம் பேசி லஞ்சம் பெரும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டத்துக்கு அருகில் உதவி ஆய்வாளர் விபத்து வழக்குக்காக லஞ்சம் வாங்கும் காட்சியும் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. காவல் நிலையம் அருகிலையே லஞ்ச பணத்தை உதவி ஆய்வாளர் வசூலிக்கும் காட்சி வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இது காவல்துறை உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: