தொழிலதிபரிடம் ரூ.20.50 கோடி பேர விவகாரம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்

பெங்களூரு : பெங்களூருவில்  தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பரீத். இவர் பொதுமக்களிடம்  இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் ேமாசடி செய்ததாக  குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பரீத்திடம்  விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டில் இருந்து  காப்பாற்றுவதாக கூறி பரீத்திடம் கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி  ரூ.20.50 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது  தொடர்பாக ஜனார்த்–்தன ரெட்டியை விசாரணைக்கு ஆஜராகும்படி  மத்திய  குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.  இதையடுத்து, வீடியோ ஒன்றை  வெளியிட்ட ஜனார்த்தன ரெட்டி, ‘போலீசாரின் சம்மன் கிடைத்தது. நான் நேரில்  ஆஜராகி விளக்கம் அளிப்பேன்’ என்று தெரிவித்தார். அதன்படி, நேற்று மாலை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் அவர் ஆஜரானார். விசாரணை 5 மணி  நேரம் நீடித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: