கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநில அரசின் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் திப்பு  ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.கர்நாடகாவில் இயங்கி வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று திப்பு சுல்தான் ஜெயந்தி  கொண்டாட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திப்பு ஜெயந்தி விழா  கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட அனைத்து  மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த இருப்பதாக பாஜ மட்டுமில்லாமல் சில இந்து  அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில்,  திப்பு ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது  தொடர்பாக துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான ஜி.பரமேஸ்வரை மாநில போலீஸ்  டிஜி மற்றும் ஐஜிபி நீலமணி என்.ராஜு சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து,. மாநில  அரசின் சார்பில் பெங்களூரு விதானசவுதாவில் திப்பு ஜெயந்தி விழா காலை 11  மணிக்கு கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: