மழை நீர் சூழ்ந்ததால் கோடியக்கரை சரணாலயம் மூடல்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் 2000 புள்ளிமான், வெளிமான் மற்றும் நரி, முயல், காட்டுப்பன்றி, குரங்கு, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. சரணாலயம் எதிரே பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஈரான், ஈராக், உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து 247 வகையான பறவைகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வந்து தங்கி செல்லும். கனமழையால் சரணாலயம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் நேற்று முதல்  சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 11ம் ேததி வரை  சரணாலயம் மூடப்படு வதாக   வனத்துறை அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: