பலத்த மழை அறிவிப்புள்ள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது : அமைச்சர் உதயகுமார் பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதையொட்டி மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்த அவர், பருவமழைக்கான நிவாரண முகாம்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் பேசிய அவர் கடந்த காலம் போல் வெள்ள பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என்றும் கூறினார். நிவாரண முகாம்களை பொறுத்த அளவில் 6,812 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்களில் சென்று தங்கலாம் என்றார். சென்னை மாநகராட்சி பகுதிகளிலே 424 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இணைப்பு கால்வாய்கள் 40 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது. 1265 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: