திருப்பூர், உடுமலையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் ஒரே படுக்கையில் இரு நோயாளிகள்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, இல்லாததால், ஒரே படுக்கையில் இருவர் சிகிச்சை பெறுவதும், தரையில் படுத்து குளுக்கோஸ் ஏற்றுவதும் போன்ற  அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு தலைமை மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் ஆண்கள் 38, பெண்கள் 28, குழந்தைகள் 49 பேர் என மொத்தம் 115 பேர் சிறப்பு காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் சோதனைகளும் நடத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் போதிய படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரே படுக்கையில் இருவர் சிகிச்சை பெறக்கூடிய நிலையும், நோயாளிகளை தரையில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காய்ச்சல் பாதிப்பு அதிகமானால் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வரக்கூடிய நிலையில், தற்போது முதல்கட்ட சிகிச்சைக்கு கூட போதிய இடவசதி இல்லாமல் ஒரு படுக்கைக்கு இருவர் படுக்க வைத்து சிகிச்சை அளிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது நோயாளிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. படுக்கை வசதியை தான் நோயாளிகளின் எதிர்பார்க்கின்றனர்.

அதுவே குறையாக உள்ள நிலையில், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மன ரீதியாக பாதிக்கப்படும் அவர்களுக்கு, நோயும் விரைவில் குணமடைவதில்லை. ஆகவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதே போல உடுமலை அரசு மருத்துவமனையில் மொத்தம் 199 படுக்கைகள் உள்ளது. நாளொன்றுக்கு இன்று 700 முதல் 800 வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். மடத்துகுளம் தாலுகாவில் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் உடுமலை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் சுகாதார துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் உடுமலை அரசு மருத்துவமனையில் தரையில் படுத்தபடி நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. குளுக்கோஸ் ஏற்றி முடியும் வரை உறவினர்கள் பாட்டிலை பிடித்தபடி அருகிலேயே மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலநிலையும் தொடர்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: