டிடிவி.தினகரனுக்கு அல்ல பாதை மாறி சென்றவர்களை மட்டுமே திரும்ப அழைக்கிறோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

அவனியாபுரம்: டிடிவி.தினகரனை நாங்கள் அழைக்கவில்லை, பாதை மாறி சென்றவர்களை மட்டுமே அழைக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, சென்னை கிளம்புவதற்கு முன் மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: டிடிவி.தினகரன் அதிமுக உறுப்பினராக கூட இல்லை. அவருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. பாதை மாறி சென்றவர்களை மட்டுமே  திரும்பும்படி அழைப்பு விடுத்தோம். டெண்டர் முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டனர். அதை நானே நேரிடையாக வழக்கறிஞர் மூலம் வாதிட்டு தடை பெற்றுள்ளேன். கட்சியையும், ஆட்சியையும் உடைக்க பார்க்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் எங்களை மிரட்டி பார்க்கிறார்கள்.

காவிரி நீர் பாயும் மாநிலங்கள் ஒத்துழைத்தால்தான் தடுப்பணை கட்ட முடியும். பருவமழை காலங்களில் தமிழகத்தில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்க, ஓய்வு பெற்ற 6 பொறியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்து, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி எங்கெங்கு தடுப்பணை கட்ட முடியும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.  தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் பற்றி  அனைவரது கருத்தையும் கேட்டு முடிவு செய்யப்படும். பட்டாசு குறித்து தற்போது வந்துள்ள தீர்ப்பை படித்துப் பார்த்து, ஆலோசித்து கருத்து கேட்ட பிறகே முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: