ஒடிசாவுக்கு அளித்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா?: மோடிக்கு நவீன் பட்நாயக் பதிலடி

புவனேஸ்வர்: ஒடிசா மக்களுக்கு ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதை மோடிக்கு நவீன் பட்நாயக் கேள்வியை எழுப்பியுள்ளார். ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இதே தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இந்த முறை தனித்தனியாக போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச மோதல் போக்கு நிலவுகிறது. இந்தக் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பிரசாரத்திற்காக பல முறை ஒடிசா வந்த பிரதமர் மோடி, ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியையும், முதல்வர் நவீன் பட்நாயக்கையும் கடுமையாக விமர்சித்தார்.

அதாவது, ‘ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும், தலைநகரங்களையும் காகித குறிப்பு ஏதுமின்றி சொல்ல முடியுமா’ என நவீன் பட்நாயக்குக்கு சவால் விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நவீன் பட்நாயக் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மோடி அவர்களே, தாங்கள் ஒடிசா மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஒடிசாவுக்கு அளித்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா?: மோடிக்கு நவீன் பட்நாயக் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: