10 ஆண்டாக கிடைத்த பணத்தை எண்ணும் பாஜ : ராகுல் காந்தி ட்விட்

புதுடெல்லி: “கோடீஸ்வர்களிடமிருந்து வந்த பணத்தை பாஜவினர் எண்ணி கொண்டிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் “அதானி, அம்பானி பற்றி விமர்சிப்பதை ராகுல் காந்தி இப்போது நிறுத்தி விட்டார். அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரசுக்கு டெம்போக்கள் நிறைய கருப்பு பணம் வந்து விட்டதா? இருவரிடமிருந்தும் ராகுல் எவ்வளவு பணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன்” என்று பேசியிருந்தார்.

இதற்கு ராகுல் காந்தி “அதானி, அம்பானியிடம் இருந்து டெம்போக்களில் பணம் வாங்கி தான் மோடிக்கு பழக்கமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பதிவில் மோடிக்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் காந்தி தன் ட்விட்டர் பதிவில், “கடந்த 10 ஆண்டுகளாக கோடீஸ்வரர்களிடம் இருந்து பெற்ற பணத்தை அவர்கள்(பாஜ) எண்ணி கொண்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் நாட்டை எக்ஸ்ரே எடுப்போம். அனைத்து பிரிவினருக்கும் சமமான பங்களிப்பை உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

The post 10 ஆண்டாக கிடைத்த பணத்தை எண்ணும் பாஜ : ராகுல் காந்தி ட்விட் appeared first on Dinakaran.

Related Stories: