ராஜீவ் கொலையாளிகள் விடுதலை தமிழக கவர்னர்தான் இனி முடிவெடுக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: ராஜீவ்காந்தி ெகாலை வழக்கில் 7  பேரின் விடுதலை தொடர்பாக கவர்னர்தான் முடிவு எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  கோவையில் நேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் செல்லும் என கோர்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கிறது. பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து 20 சட்டமன்ற தொகுதிக்கு எப்போது தேர்தல்  நடந்தாலும் போட்டியிட அ.தி.மு.க தயாராக இருக்கிறது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு எட்டப்பர்களுக்கும், துரோகிகளுக்கும் நல்ல பாடம் கற்று தந்துள்ளது. நொய்யல் ஆறு சீரமைப்பு திட்டத்திற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்கிய பின்னர்தான் பணிகள் துவக்கப்படும்.  இலங்கையில் ராஜபக்சே மீண்டும் பிரதமராக ேதர்வு பெற்றுள்ளார். இலங்கையில் நடந்த போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிக்க அ.தி.மு.க வலியுறுத்தி  வருகிறது. அவர் பிரதமராகியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

 பட்டாசு தொடர்பாக ேகார்ட் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நாங்கள் பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் கோர்ட் உத்தரவில் தலையிட முடியாது. உள்ளாட்சி தேர்தல் நடத்த தயாராக இருந்த நிலையில் தி.மு.கவினர் ேகார்ட்டுக்கு சென்று தடை ஆணை பெற்றனர். தேர்தல் நடத்த முடியாதபடி செய்து விட்டார்கள்.  கோர்ட்டுக்கு என்ன காரணத்திற்காக அவர்கள் சென்றார்கள்  என தெரியவில்லை.  ராஜீவ் காந்தி ெகாலை வழக்கில் கைதான 7 பேரின் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் வழங்கியது. இனி முடிவு எடுக்கவேண்டியது கவர்னர்தான். இவ்வாறு அவர் கூறினார். தனியார் டிவி நடத்திய கருத்து கணிப்பில் ஆட்சி அமைக்க திமுகவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், 54 சதவீதம் பேர் அ.தி.மு.க ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பது தொடர்பாகவும் முதல்வரிடம் கேட்டபோது அவர், ‘‘இந்த  கருத்து கணிப்பு எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை. நேற்றும் இன்றும் நான் கோவை நகரில் ஆய்வு சென்று வந்த போது மக்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள். எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: