பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை எஸ்பியிடம் பரோலில் விடுதலை செய்யக்கோரி இளவரசி மனு: முதல் முறையாக கோரிக்கை

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசி, பரோல் கோரி  சிறைத்துறை எஸ்பியிடம் விண்ணப்பம் செய்துள்ளார். தமிழகத்தில் இருந்து  தடையில்லா  (என்.ஓ.சி) சான்றிதழ் கிடைத்ததும் அவருக்கு பரோலுக்கான அனுமதி  கிடைக்கும் என்று கூறப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில் கைதான  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்  இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறையில் தண்டனை  கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சசிகலா மட்டும் ஒரு  முறை கணவர் இறந்ததற்காக பரோலில் சென்று வந்துள்ளார். மீதமுள்ள 2 பேரும்  இதுவரை  பரோலில் செல்லவில்லை.

 மேலும் அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையும் இருவருக்கும்  அமையவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டனை  கைதி இளவரசியிடம், சகோதரர் உடல்நிலை  சரியில்லாமல் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை பார்ப்பதற்கு  வரும்படியும்  உறவினர் ஒருவர் சிறையில் சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார். அதை ஏற்ற இளவரசி தனது வக்கீல் மூலம் பரோல் மனுவை சிறைத்துறை எஸ்.பி சோமசேகரிடம் அளித்துள்ளார். தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கிய பின் இளவரசிக்கு பரோல் வழங்கப்படும் என்று  தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: