பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை 2 வருடங்கள் மிரட்டி பலாத்காரம் செய்ததாக ஜலந்தரில் பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டு பாலா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பிஷப் பிராங்கோ ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. பாஸ்ேபார்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், விசாரணை ேதவைகளுக்கு அல்லாமல் கேரளாவுக்குள் நுழையக்கூடாது என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனையுடன் அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: