தரங்கம்பாடி பகுதியில் நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பு பணி தீவிரம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் நல்லாடை ரோட்டில் உள்ள பொம்மை தயாரிக்கும் தொழிலகத்தில் நவராத்திரியையொட்டி பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு, பிரதோஷசெட்டு, கும்பாபிஷேக செட்டு, சூரியரதம், லவகுஷாசெட்டு, கார்த்திகை பெண்கள், கோகிலா கண்ணன் செட்டு, கணையாழி செட்டு உள்ளிட்ட செட்டுகளாக பொம்மைகளும் நடராஜர், கிருஷ்ணன், ஆண்டாள், லெட்சுமி, சரஸ்வதி, முருகன், காமதேனு, பாபா, யசோதா கண்ணன், உள்ளிட்ட தனி பொம்மைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பொம்மை தொழிலகத்தின் உரிமையாளர் விஜய் கூறும்போது,  நாங்கள் தலைமுறை தலைமுறையாக பொம்மை தொழில் செய்து வருகிறோம். நவராத்திரியையொட்டி பலவித செட்டு பொம்மைகளும் தனிபொம்மைகளும் செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு, பிரதோஷசெட்டு உள்ளிட்ட பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. திருச்சி, தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக பொம்மைகளை அனுப்பி வருகிறோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: