காவேரிப்பட்டணம் திமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்ட அவைத்தலைவருமான வெங்கடேசன்(72) உடல்நலக்குறைவால் கடந்த ஒரு மாதமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். நேற்று அதிகாலை அவர் மரணமடைந்தார். இவர் 1996 -2001ம் ஆண்டு காவேரிபட்டணம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது தந்தை ராமுலு நாயுடு கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். மறைந்த வெங்கடேசன் உடலுக்கு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். வெங்கடேசன் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: