திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.18 கோடி மோசடி.....தம்பதி கைது

திருப்பூர்: திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.18 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் நண்பர்கள் பெயரில் பின்னலாடை நிறுவனம் ஒன்று தொடங்கி இருப்பது போல் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார். அந்த போலி ஆவணங்களை வைத்து தனியார் வங்கியில் ரூ.10.25 கோடி கடன் பெற்ற செந்தில்குமார் அதனை திருப்பி செலுத்த முடியாமல் திகைத்துள்ளார்.

இந்த நிலையில் பணம் தேவை உள்ள தொழில் அதிபர்களை அணுகி எளிதில் கடன் பெற்று தருவதாக கூறி அவர்களிடம் இருந்து ஆவணங்களை வாங்கியதாக தெரிகிறது. சிவபிரகாசம், ராமசாமி என்பவர்களிடம் ஆவணங்களை பெற்ற செந்தில்குமார் அவற்றை பயன்படுத்தி கடந்த மூன்று மாதத்திற்கு முன்  ரூ.18 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. அந்த பணத்தை வைத்து தனது கடனை செலுத்திய செந்தில்குமார், தொழில் அதிபர்களின் பணத்தை தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.

கடன் பெற்றதாக வங்கியில் இருந்து தகவல் வந்ததால் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த தொழில் அதிபர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். விசாரணையை அடுத்து மோசடியில் ஈடுப்பட்டதாக செந்தில்குமார்-பிரியா தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் நான்கு வங்கி ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: