திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி அடையாள அட்டை பயன்படுத்தி 100 தரிசன டிக்கெட் பெற்று மோசடி: சேலத்தை சேர்ந்தவர் சிக்கினார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி அடையாள அட்டை பயன்படுத்தி 100 தரிசன டிக்கெட் பெற்று மோசடி செய்த சேலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய சேவைகளான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உட்பட ஆர்ஜித சேவைகள் பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுக்கு கடும்  வரவேற்பு உள்ளது.  இந்த டிக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு டிக்கெட்  வழங்கப்படுகிறது. அவ்வாறு குலுக்கல் முறையில்  வாங்கக் கூடிய டிக்கெட்டுகளை சிலர் போலி ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கில் பதிவு செய்து குலுக்கல் முறையில் டிக்கெட் பெற்று பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்று  வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பிரபாகர் மற்றும் தேவஸ்தான ஒப்பந்த ஊழியர் சீனிவாஸ் ஆகியோர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது 2600 சேவா  டிக்கெட்டுகள் பெறுவதற்காக பல ஆயிரம் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டு இருப்பது தேவஸ்தான விஜிெலன்ஸ் அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடக  மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மகனின் பங்கும் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடகாவுக்கு சென்றுள்ள விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சேலத்தை  சேர்ந்த பாலசந்தர் போலி அடையாள அட்டை பயன்படுத்தி 1850 டிக்கெட் பெற ஆன்லைனில் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் பாலசந்தர் 100 சுப்ரபாதம் டிக்கெட் பெற்றுள்ளார். இதில் சசிகுமார், ராஜேஸ்வரி பெயரில் உள்ள அடையாள அட்டையை போலியாக தயார் செய்து டிக்கெட் பெற்று 120 விலை கொண்ட சுப்ரபாதம் டிக்கெட்டை  2000க்கு ராமசாமி, பத்மாவதி தம்பதியினருக்கு விற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாலசந்தரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: