ரயில் நிலையத்தில் செல்போன் திருடிய வெளிமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

சென்னை: வேலைக்கிடைக்காத கோபத்தில் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வெளிமாநில வாலிபர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியபோது தன்னுடைய செல்போன் திருடுபோனதாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த பெருமாள் என்பவர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோ பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது மேற்குவங்கம் மாநிலம், ஹவுரா பகுதியை சேர்ந்த ராஜ்ராவ் (29) என்பவர் இதேப்போன்று வேறு ஒருவரிடம் செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தை சேர்ந்த பாபு தாஸ் (26) என்பவருடன் சேர்ந்து செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து பாபு தாஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் வேலைதேடி சென்னைக்கு வந்ததாகவும் வேலை எதுவும் கிடைக்காததால் இதுபோன்று செல்போன் போன்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.  இதையடுத்து ரயில்வே போலீசார்அவர்கள் இருவர்கள் மீதும் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: