பக்ரைன், கோலாலம்பூர், துபாயில் இருந்து வந்த அடுத்தடுத்த விமானங்களில் 25.5 லட்சம் தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது

சென்னை: வெளிநாட்டில் இருந்து அடுத்தடுத்து வந்த 3 விமானங்களில் சுற்றுலா பயணியாக சென்று திரும்பிய 3 பேரிடம் இருந்து 25.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். பக்ரைனில் இருந்து கல்ப் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த அரியலூரை சேர்ந்த கார்த்திக் (45), சுற்றுலா பயணியாக சென்று திரும்பினார்.  சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது கோட்டை கழற்றி சோதனையிட்டனர். சில தங்க வளையங்கள் வைத்து, பூக்களை தங்கத்தால் எம்ப்ராய்டிங் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. வளையம் மற்றும் பூக்களாக இருந்த எம்ராய்டிங் செய்யப்பட்ட 350 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 10.5 லட்சம். பிறகு கார்த்திக்கை கைது செய்தனர்.

இதைதொடர்ந்து,  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வந்தது. . அதில் சென்னையை சேர்ந்த ஆரோக்கியம் (51), சுற்றுலா பயணியாக சென்று வந்தார். அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனையிட்டதில், சிறுசிறு தங்க துண்டுகளை வைத்து கீ செயின் தயாரித்துள்ளது தெரிந்தது. அவரிடம் இருந்து 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹6 லட்சம். அவரை கைது செய்தனர். இதேபோல், துபாயில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சிவகங்கையை சேர்ந்த பிரவீன் (46), வைத்திருந்த ஸ்வீட்ஸ் பார்சலை பிரித்து சோதனையிட்டபோது, தலா 100 கிராம் கொண்ட 3 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தார். இதன் மதிப்பு 9 லட்சம்.  அதனை கைப்பற்றிய அதிகாரிகள், பிரவீனை கைது செய்தனர்.

சவுதி கரன்சி பறிமுதல்

சென்னையில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் இரவு கொழும்பு செல்லும் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது உசேன் (32), அஸ்ரப் (26) ஆகியோரது உடமைகளை சோதனையிட்டனர். அவர்களது கைப்பையில் கட்டுக்கட்டாக சவுதி ரியால் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் இந்திய மதிப்பு 5 லட்சம். இதையடுத்து அவர்களது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: