மோதல், நோய் பாதிப்பால் கிர் சரணாலயத்தில் 11 சிங்கங்கள் சாவு

காந்திநகர்: மோதல் மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக கிர் சரணாலயத்தில் 11 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.குஜராத் மாநிலம், கிர் வனப்பகுதியில் 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 520 சிங்கங்கள் இருந்தன. இந்நிலையில், கடந்த 8 நாட்களில் 11 சிங்கங்கள் இந்த சரணாலயத்தில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியது.இதில், தல்கானியா சரகத்தில் 9 சிங்கங்களும், ஜசதார் சரகத்தில் 2 சிங்கங்களும் உயிரிழந்துள்ளன. இதற்கான காரணத்தை அறிய, உரிய விசாரணை நடத்தும்படி வனத்துறைக்கு மாநில அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இது தொடர்பாக குஜராத் அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ` இறந்தவற்றில் 3 சிங்கங்கள் மோதல் காரணமாகவும், மற்ற 3 சிங்கங்கள் நோய் தொற்று காரணமாகவும் உயிரிழந்துள்ளன. மேலும், 5 சிங்கங்களின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: