வீட்டுவசதி குடியிருப்பு ஒதுக்கீட்டில் பாரபட்சம்: அதிமுக எம்எல்ஏ, எம்.பியை முற்றுகை: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் அதிமுகவினருக்கே முன்னுரிமை அளிப்பதாக கூறி, பொதுமக்கள் அதிமுக எம்.எல்.ஏ., ராமலிங்கம் மற்றும் ஈரோடு எம்.பி.,செல்வக்குமார சின்னையன் ஆகியோரை முற்றுகையிட்டனர். ஈரோடு அருகே முத்தம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இவற்றை ஈரோடு பெரியார்நகர் பகுதி குளத்துப்பண்ணை ஓடை புறம்போக்கு இடத்தில் வசித்து வருபவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வீடு ஒன்றுக்கு 75 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று ஆளும்கட்சி தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குளத்துப்பண்ணையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தினர்.

 இந்நிலையில், நேற்று வீட்டிற்கு பணம் கட்டியவர்களுக்கு சாவி வழங்குவதாக கூறி அழைத்துள்ளனர். பொதுமக்கள் சென்றபோது குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., ராமலி–்ங்கம் மற்றும் ஈரோடு எம்.பி.,செல்வக்குமார சின்னையன் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பணம் செலுத்தியவர்களுக்கு விரும்பிய வீட்டை தருவதாக கூறிவிட்டு தற்போது குலுக்கல் முறை என்கிறீர்கள். அதிமுகவினருக்கு விதிமுறைகளை மீறி வீடுகளை ஒதுக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்கள். விதிமுறைகளை மீறி அதிமுகவினருக்கு வீடுகள் வழங்கியுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.  பணம் கட்டியவர்களுக்கு குலுக்கல் முறையில் தான் வீடு ஒதுக்குவார்கள். இன்னும் பணம் கட்டாதவர்கள் பணம் கட்டினால் அவர்களுக்கும் வீடு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: