2 கார்களின் கண்ணாடியை உடைத்து லேப்டாப்கள் கொள்ளை

சென்னை: சென்னை ஆழ்வார் திருநகர் அரவிந்த் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (23). இவர் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது காரில் உணவு சாப்பிடுவதற்காக அண்ணாசாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகே காரை நிறுத்திவிட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு செல்ல காரை எடுக்க வந்த போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்தபோது, காரில் வைத்திருந்த ₹1 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் லேப்டாப் மாயமாகி இருந்தது.அதேபோல், வில்லிவாக்கம் பாபாநகரை சேர்ந்தவர் ராம் (40). இவர் நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் 6 வது பிரதான சாலையில் காரை நிறுத்திவிட்டு ஓட்டலில் உணவு சாப்பிட சென்றார். பின்னர் காரை எடுக்க வந்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த லேப்டாப் மாயமாகி இருந்தது. சென்னையில் சில நாட்களாக கடைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்படும் கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: